பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு மலேயில் பிறந்தேன் ; தவழ்ந்திறங்கி மண்ணில் பாய்ந்தேன் விளையாட ; இலேயும், சருகும், உதிர்பூவும் இயற்கை தந்தாள் வழித்துணைக்கே ; சலசலத் திடுவேன் கல்லிடுக்கில் ; சாரைபோல் நான் நெளிந் தோடிப்பின் தலையை அசைப்பேன் ; பாய்ந்தோடித் தமிழ்த்தேன் இசையை மீட்டிடுவேன் ! பொன்னேப் பொடித்த மணல்மீது புதுமணப் பெண்ணின் பொலிவடைவேன்; மின்னும் வயிரக் கண்தவளே மிதந்து வந்து, நாரையரே ! இன்னும் உலகம் பெருந்துயிலில் இருப்பதாய் நினைவோ இத்தவசு ? என்னும் ; மீனினம் எழுந்தெழுந்து இளித்துக் காட்டும் ! எக்களிப்பேன் ? பெற்ருல் காட்டில் விடுதலேயாம் பேதமி லாவென் மனப்பான்மை ; சிற்றுார் பட்டினம் புகுந்தோடிச் சேமித் தெடுத்துநான் எவ்வுயிர்க்கும் கற்ருய் நாள்ை ஊட்டிடுவேன் ; - நலியா துலகைக் காத்திடுவேன் : கற்றிடல் உண்டோ தளதளத்த கன்னம் என்றன் சுழிப்பையெலாம் ?