பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாலுபேர் கூடிச் சொன்னல் கெட்டதை நல்ல தென்பார்; முலத்தை ஆய்ந்து பாரார்; முச்சிமேல் தூக்கி ஆர்ப்பார் ; சீலமில் மக்கள் கூற்றுத் தீதடா தீதே!’ யென்று சாலேயில் முணறிற் றப்பூ தூக்கிவிடாக் கவிஞன் போலே ! ‘மாமியார் செய்த தைப்போல் மருமகள் செய்வாள்' என்றிப் பூமியில் பெண்கள் சொல்லும் கொள்கையில் புரட்சி காண்போம் ! ஏமஞ்சேர் மலரிந் நாட்டில் எம்மல ராயி னென்ன ? நாமிதைத் துலேபோல் தூக்கி கல்லதைக் கொள்ளு வோமே !