பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டையும் சேவலும் கண்ணினே முடி முடிச் சாகசம் செய்யும் பெட்டை : அண்மையில் சேவல் நிற்கும் ; பட்டுடல் அழகை வாரிக் கண்களால் உண்ணும் ; ஒற்றைச் சிறகினைக் காலில் தட்டிப் பண்மீட்டும் அடடா ! காதல் பறிபோகும் ! இன்பம் 1 இன்பம் ! £ பிட்டினில் நெய்யைப் பெய்து பிசைந்துண்ணு வார்போல் குள்ளப் பெட்டையும் ஆணும் இன்பப் பெருங்கடல் நீந்தும் ; ஆங்கோர் வட்டையாம் சேவல் காதல் மலிவென்று நெருங்கித் தொட்டுப் பட்டதைக் கண்ட தோட்டப் படர்முல்லே சிரிக்கும் ! அந்தோ ! 9* செடிநிழல் குளிர்மண் சீய்த்துச் சேக்கொரித் திருக்கும் பெட்டை ; அடியொற்றித் தொடர்ந்து சேவல் பக்கத்தில் அமரும் ; நாட்டுக் குடித்தனக் காரர் நாணக் கொஞ்சிடும்; ஊடல் தீர்க்க அடிக்கடி கழுத்தை நீட்டி ஆர்த்திடும் சிறகடித்தே !