பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. தேன்வேறு ; சுவைக்கின்ற மக்களோ வேறு ; சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் , சிந்திக்க வேண்டும் ! காணுற்றில், நெருஞ்சிதைக்கும் மணல்வெளியில், வானில், கதிர்விழையாப் பெருங்காட்டில் அவளைத்தான் காண்பேன் ! மான் பாயும் ; புலிஅடிக்கும் ; மயிலாடும்; அந்த மங்கையின் கினேவின்றி மகிழ்ச்சிகண்ட தில்லை ! வான் நிலவில் அவளேத்தான் என்கண்கள் காணும் ! சிரிக்காதே ! அவளின்றேல் மலராதென் வாழ்வே !! 4