பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளில்லே! வருவேன் என்று மாலேயிலே வாக்குத் தந்தாள் ; அவளேநான் இரவில் சற்றும் தூங்காமல் எட்டி எட்டிப் பார்த்திருந்தேன் ; ஒருவர் நடத்து வருவதைப்போல் ஓசை கேட்க எழுந்திருந்தேன் ; தெருவில் இருந்த நாயொன்று திண்ணே யோரம் படுத்ததுவே ! எண்ணு தெண்ணிச் சன்னலண்டை இருந்தேன் இரவில் வழிபார்த்து, பெண்ணுள் வந்தாள் வீட்டோரம் ; பேசா தெழுந்து தாழ்விலக்கித் திண்ணே வந்து கூப்பிட்டேன் ; தேடிப் பார்த்தேன்; அவளில்லை ! சுண்ணும் பிடித்த பந்தற்கால் ஆடி யசைந்து தோன்றியதே ! என்னைத் தேடி அவளினிமேல் வாராள் என்று படுக்கையிலே கண்ணே இறுக்கிப் படுத்திருந்தேன் ; கதவு திறக்க அவளென்றே எண்ணிக் குதித்துக் களிப்பினிலே இருகை விரித்து நான்பர்ய்ந்தேன்; பெண்ணுள் இல்லை ; விளக்கேற்ற.. ஒடிற் றங்கோர் பெருச்சாளி !