பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வார்த்தை பார்க்கின்ருப் பார்க்காமல் நான் இருக்கும் பக்கம் ; பாட்டிசைத்துக் கொள்கின்ருய் தாழ்குரலில்; ஆடடா ! வார்த்தையை கினைக்கின்ருய் ; ஆனாலும், தோன் வாய்திறவா திருக்கின்ருய் ஈதென்ன பசப்போ ? மோர்ச்சோற்றைக் கண்டலையும் பூனேயைப்போல் உள்ளடி முந்துதடி உனத்தாவி ; பொறுப்பென்மேல் இல்லை ! வார்த்தெடுத்த பொற்பாவாய் ! என்னுயிரே அழகே ! மயங்காமல் ஒருவார்த்தை சரியென்று சொல்லேன்! Jo வழிமறித்து கிற்கின்ருய் வேலியிடை தோன் ; வாவென்று பூக்கையால் அழைக்கின்ருய் , அங்கும் விழியாலே சிரிக்கின்ருய் ; நானுன்னேத் தாவ வேலுருவில் மறைகின்ருய் என்னுயிரே அழகே ! சுழித்திழியும் ஆற்றில் உன் முணுமுணுப்புக் கேட்டேன்; தொலைந்த்தடி என் துன்பம் ஆலுைம், ஒன்றும் மொழியாது நிற்கின்ருய்; பொறுப்பென்மேல் இல்லை ! மொய்குழலே ஒருவார்த்தை சரியென்று சொல்லேன் 2 வண்ணமலர் நாற்றத்தை வாரிவந்து காலே மகிழ்வூட்டி என்னுடலில் வலிமைசேர்க் கின்ருய் ; புண்ணுன மனத்திற்குப் புதுப்பாட்டுப் போலப் பொதியமலை மீதிருந்து தவழ்ந்துவரு கின்ருய் ; உண்ணுதற்கும் கினேவில்லே உனேக்காணுங் தோறும் ; ஆலுைம், உனக்கேனே பொறுப்பில்லே என்மேல் மண்ணிரம் அகப்பட்ட அரசிலேபோல் ஆனேன் ! வாழ்விக்க ஒருவார்த்தை சரியென்று சொல்லேன் ! $