பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணியவில்லை! அத்தியிலே வருகின்ருள் என்னத் தேடி , அலமோதும் என்நெஞ்சிற் காசை காட்டக் குந்துகிருள் என்னருகில் ; நான்தி ரும்பக் குனிந்தெழுந்து நடக்கின்ருள் ; குறும்புக் காரி ! * இந்தாரும் என்கின் ருள் தமிழ்த்தேன் ஊறும் இதழ்நீட்டி; நானெழுந்தேன் ; என்றன் உள்ளத் தொந்தரவைப் பலநாளாய் அறிந்தி ருந்தும் குறைமுடிக்க அவளேனே துணிய வில்லை ! கடலோரம் கான்சென்றேன் அமைதி தேடக் , கைக்காரி அவள்வானில் தவழ்ந்து வந்தாள் ; உடைந்த என் மனம்பின்னும் ஊக்கம் கொள்ள உட்கார்ந்தாள் என்னருகில்; அடடா அந்தக் கடைக்கண்ணுல் எனப்பார்த்தாள் தமிழ்த்தேன் ஊறும் கண்வீச்சில் அவள்செய்யும் கொடுமை யெல்லாம் கொடிப்போதில் நான்மறந்தேன் ; இன்னும் ஏனே நுண்ணிடையாள் குறைமுடிக்கத் துணிய வில்லே ! படுக்கையில் புரண்டிருந்தேன்; அவளப் போது பலநாளாய்ச் செய்துவரும் கொடுமை எண்ணி நடுவேளே என்ன ருகில் வந்தாள் ; சற்று நான்பாடும் பாட்டொன்றைக் கேட்பா யென்ருள் ; 'முடியாது போ’ என்றேன் ; என்றன் நெஞ்சில் முண்டிருக்கும் துயரத்தை மாற்ற எண்ணிக் கொடுக்கின்றேன். இதழென்ருள் ; குதித்தெ ழுந்தேன்;. குறைமுடிக்க அவளேைே துணிய வில்லை ! 3