பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாக் காதலி ஆற்று மணற்பரப்பில், - உள்ளம் அள்ளிடும் செவ்வொளியில் - அவள் மேற்றிசை வானிருந்து - மயிலென மெல்ல கடந்து வந்தாள் ! வெட்கம் சிறிதுமின்றி - அவள் வேல் விழி தூதனுப்பி - என் பக்கம் வருக'வென்ருள் - துள்ளிப் பாய்ந்தேன் அவளருகில் ! மண்ணில் பலவுயிர்கள் - பேசும் வாக்கின் நுணுக்கமெலாம் - தமிழ்ப் பண்ணில் எனக்குரைத்தாள் - இன்பப் பார்வை மொழியாலே ! ஆடை பிடித்திழுத்தேன்; - பலப்பல அன்பு மொழியுரைத்தேன்; ஒடையுள் சென்ருெளித்தாள்: ~ என் உள்ளம் வெறிகொளவே ! - தோப்பினில் பாட்டிசைத்தாள் - கிளே தொறும் தொத்தித்தொத்தி மகிழ்ந்தே ! . ஒய், மாப்பிள்ளே ! உண்ணவாரும் ! - ஒட்டு மாம்பழம் தாரேன்’ என்ருள். 6