பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி வானத்தைப் பார்ப்பாள் : அந்தி வண்ணத்தைப் பார்ப்பாள்; நெஞ்சம் ஏனென விளக்கிச் சொல்ல இயன்றிடாத் துயர்க ருக்க மோனத்தில் சோர்ந்து நிற்பாள்; முழுமதி முகம்சு ளுக்கிப் போனவர் இன்னும் என்ன புரிகிருர் ஆங்கே?' என்பாள். புத்தகம் அசட்டை யாகப் புரட்டியே பார்ப்ப தைப்போல் அத்தையின் ஏவல் செய்வாள்; அவள்மனம் இன்னும் ஏனே புத்தியில் இனிக்கும் மாசிப் புதுத்தென்றல் தன்னை யொத்த அத்தானேக் கானே மென்று அடிக்கடி கேட்கா நிற்கும். சிறுஒலி கேட்க வந்து கதவினத் திறந்து பார்ப்பாள்; வறுமையில் வாழும் மக்கள் முகமென வாடும் கண்கள்; துறையிலா வாவி தன்னில் குளித்திடச் சுற்று வார்போல் அறையினுள் செல்வாள்; வாயில் அருகினில் வந்து பார்ப்பாள்.