பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 வாணிதாசன் விடைப் பாடல்கள் விஞ: ! வெளிச்ச விளம்பர வேட்கை தணியக் களித்ததோர் பூம்புகார்க் காட்சி விழாவினில் காக்கைகள் கூடிக் கரைந்ததைக் கேட்டதும் ஆக்கம் அடக்கம் அடடா எவனென எண்ணிக் கிடந்தேன்! இதுபோலுணர்வுகள் திண்ணமாய்த் தங்களுக் கேற்பட் டிருக்குமே? விடை : என்னை விழாவிற் கழைத்தனர்; என்னுடல் நோய் பின்னுக் கிழுக்கநான் பேசா திருந்துவிட்டேன்; வானத்து மாமழை வற்றினும் வற்ருமல் கானம் கடந்து கழைமாயும் நீர்கூட்டி தன்செய் விளைத்து நறும்டின் செய் பாலூட்டித் தஞ்சைப் பெருநாட் டின் தாயாகி விஞ்சு புகழ்சேர்த்த பொன்னிப் புதுப்பெண் ஒளிசேர் முகமாகும் பூம்புகார் முதுார்! அம்முதுரர் மறைந்த குறைநீக்க வந்த அரசு நிறைந்த மனத்தால் நினைவூட்டக் கண்டோமே! சீர்த்தீ மிகுந்த செயலிதுவாம்! வாழ்த்திடுவோம்! கார்த்திகைத் திங்கள் கடுங்கோடை இலுைம் காக்கைகள் என்றும் கரையும்! அக்காக்கைகள் போக்கைத் திருத்தல் புலிக்கொம்பைத் தேடுவதே!