பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 35 விடை : களத்திடைக் கண்ட பதரும் மணியும் விளக்குமே இந்த வினவின் விடையை! விலைமகள் என்றும் குலமகள் ஆகாள்! அலைகடல் போன்றதே ஆன்ருேர் படைப்பு விஞ :

  • கழகம் தொடங்கிய காலம் முதலே கழகப் பணியில் கலந்தவர் தாங்கள்! பதவிப் பழத்தைப் பறித்ததும் ஆள்வோர் முதலில் உமது முகத்தை மறந்ததேன். வெற்று முழக்க விளம்பர உத்திகள் கற்றிலை என்றே கழகம் மறந்ததோ?

விடை : வெற்று முழக்க விளம்பர உத்திகள் கற்றது மில்லை; நான் கற்கவும் மாட்டேன்! மறந்தால் கழகம் மறந்து போகட்டும் இறவாக் கவிதை இனிதெனக்(கு) என்றுமே! விரு :8 நேரடி யாக நெடுநாள் பழகிய பாரதி தாசனர் பண்பு நலன்களை எங்களுக் கெல்லாம் இயம்பிடத் தக்கவர் தங்களை விட்டால் தமிழகத் தாருளார்? சிங்கத் தமிழன் சிறப்பினைச் செய்யுளில் இங்கித மாக எடுத்துத் தருகவே! விடை : பாரதி தாசனர் பண்பு நலன்களை ஊருக்கு ரைக்க ஒருவாயா போதும்?

  • தி.மு.க.