பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாணிதாசன் விடை: 'யாதாமால் ஊராமால்' என்கின்ற வள்ளுவரை ஒதாத நாளெல்லாம் நாளாமோ என்பதுவே! வி ை14 - ஆக்கம் கவிதையில் ஆகுக என்றுமே ஊக்கிய துண்டா உவந்து துணைவியார்? விடை : என் மனைவி சிற்றுார்; எழுதத் தெரியாதாள்! பொன்னைப் பொருள் அறிவாள்; புகழறியாள்! அன்ளிைன் ஊக்கம் எனக் கூக்கம் ஆகிடுமா? பின்னுள் செயலெதுவோ? பேச்செடுக்க வேண்டாம்! விஞ :15 திறம்மலி தீந்தமிழ்ப் பாவல! தங்கள் பிறந்தநாள் செய்தியைப் பேசிட வேண்டுவம்1 விடை : என்றன் அருமை இளவழுதி நற்கவிஞர் இன்றும் பிறந்தநாள்; துப் எண் ணம் என்னென்ருர்! சென்றது. சென்றதுவே; என்றும் திரும்பாது! தன்றே இனிப்புரிக! நற்றமிழைத் தாய்மொழியை ஊன் உடல்போல் ஒம்பி உலக மொழிக்கெல்லாம் தேன்வழங்கச் செய்க திருநாட்டு மக்கள் பகுத்துண்டு வாழ்க! பகைநீக்கி வாழ்க! தொகுத்துரைக்கும்நூலின் துணைகொள்க என்றென்றும் ஒன்றிரண்டு பெற்றே உயர் குடியின் நற்பெயரை என்றும் நிறுத்தல் இனிது! . . 22–7–73 c. புதுமைக் கவிஞரேறு, பாவலர்மணி வாணிதாசனரின் 59 ஆம் ஆண்டு தொடக்க நாள் அன்று கவிஞர் க.பொ. இளம்வழுதி கேட்ட வினப் பாடல்களுக்குக் கவிஞர் அளித்த விடைப் பாடல்கள், r -