பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 . வாணிதாசன் மற்கிலம்பம் செய்கின்ருர்: தமிழ்மொழியா வாழும்? வாயில்லா ஊமன்போல் வாழ்கின்ருர் மக்கள்! பொற்புடைய தமிழ்மக்காள்! மரபுடைய நல்ல புதுத்தமிழை வளர்த்திடுவீர்! வாழ்ந்திடுவீர் நீடே! 14 இன்றளும் அரசியலால் எப்பயனும் கிட்டா!. இவர்க்காக வா,தமிழை இரவெல்லாம் கற்ருேம்: குன்றெதிர்க்கும் நம்பாடல்1 குரைகடலும் ஒர்நாள் கூறுவதைக் கேட்பார்கள்; குறிப்புணர்ந்து கொள்வார்: என்றென்றும் நாம் இறந்து போனலும் செஞ்சொல் இனியகவி சாவாது; நாம்சாவ மாட்டோம்! நன்றறிந்தும் இலக்கியத்தின் நயனறிந்து கொண்டும் வழங்காத நாட்டிற்கே நாம்வழங்கு வோமே! 15 பிற்காலம் தமைஎன்னும் பெரியோர்கள் ஆய்வைப் பேசுகின்ற நல்வாய்ப்பை இளைஞரிடம் சேர்ப்போம்; முற்காலம் நற்காலம்; ஆன்றவிந்த சான்ருேர் முதுபுகழும் இலக்கியமும் அழிந்தொழிந்த துண்டோ? கற்காலம் கண்டவளே! தமிழ் மகனே! உன்றன் கைகாலின் உழைப்பலவோ இன்றுள்ள நாடு! பொற்காலம் மறைந்தாலும் இன்றுள்ள நாட்டின் புதுக்காலம் இனித்தேவை உன் கடமை யாமே! 16 மன்றிருந்து சிறப்பிக்க வந்துள் ளோர்க்கும் வரிசையாய் அல்கிங்கே காற்றுக்காக நின்றிருந்து சிறப்பிக்க வந்துள்ளோர்க்கும் நெறிசெலுத்தும் புதுவைமா நிலத்தை மேலாய் இன்றிருந்தே ஆள்கின்ற அமைச்சர் கட்கும் இனியதமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்க்கும் அன்றிருந்தே இன்றுவரை எனைவாழ் விக்கும் அருந்தமிழ்க்கும் என்நன்றி! வணக்கம்! வாழ்த்தே! 17