பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 அணிந்துரை வழங்கிய டாக்டர் நன்னன் அவர்களின் ஐயத்தினைக் களையும் வகையில், பக்கம் 82இல் உள்ள கார்த்திகைத்திங்கள் கடுங்கோடையானாலும், என்பதற்கு கார்த்திகைத் திங்கள் வழக்கமாக மழைக்காலம் ஆனது அக்காலம் மாறி கடுங்கோடையாக மாறினாலும், என நேர் பொருள் கொள்ளலாம். அடுத்து பக்கம் 14இல் உள்ள ‘சத்தியபாமை நம் நாட்டுப் பெண்னுமே” என்பதைக் கவிஞர் தேசிய நோக்கிலே சத்தியபாமை நம் காட்டுப்பெண் எனக் கூறியிருக்கின்றார் எனக்கொள்ள வேண்டும். அடுத்து பக்கம் 22இல் உள்ள "தும்பிக்கை யானை தாம்தொழு தெழுந்தால் என்பதற்கு விளக்கமாக, தமிழ் நூல்களின் தொல் வளலும் அதன் பெருஞ்சிறப்பும் இவற்றைக் கற்ற தனால் வந்த புலமை யூற்றும் இவற்றால் பெறப்படுகின்ற தன்ம்ைபிக்கையையும் இழக்கச் செய்தது தும்பிக்கையானை தொழுதெழும் மூடச்செயலாம் எனும் பொருளை உணர்த் தவே அவ்வரியினை அமைத்துள்ளார் கவிஞர். . எனவே கவிஞரின் பகுத்தறிவுக் கொள்கையில் ஐயமோ மருட்சியோ கொள்ளத் தேவையில்லை. காரணம் இறுதிச் காலம்வரை அக்கொள்கையில் கோடாகிருந்து மறைந்தார் கவிஞர். - - பிழை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும் என எவ்வளவோ முயன்றும் தவிர்க்க இயலா சில அச்சுப் பிழைகள் இடம் பெற்ற விட்டமையை வருத்தத்தோடு தேரிவித்துக் கெரன் கிறேன். * . . . இக்கவிதைத் தொகுதியைத் தமிழன்பர்கள் ஏற்று மேலும் வெளிவரவிருக்கின்ற கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம் ஆகியவற்றை வெளியிட் ஊக்கன் அளிப்பார்கள் என நம்புகிறேன். வணக்கம், நன்றி. அரங்க நலங்கின்னி