பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* మిగా పోతిగా శాశ பந்தியிலே தலைவாழை இலையிட்டே உண்போர் பசிeறக் கையேந்திக் கெஞ்சுகின்ற ஏழை டிந்தியிலே நிழலாடக் காண்கின்றேன்; இந்தப் போக்கெல்லாம் என்பாடல் மாற்றிவிட்டால் போதும்! பாலுக்கே அழுங்குழவி பசிக்கேங்கு வோர்கள் பாயின்றி இடமின்றி நிழலுறங்கும் கூட்டம் நூலுக்கே வழியின்றிக் கைத்தறியால் வாழ்வோர் நுணலைப்போல் கூச்சலிட்டால் பசிநீங்கிப் போமோ? வேலுக்கே வேலெதிர்ப்பை விளைவிக்க வேண்டும்! விரைவினிலே மக்கட்கு நல்லுழைப்பைத் தூண்டத் தோலுக்கே உணர்வூட்டப் பகுத்தறிவை ஊட்டத் தூயதமிழ் என்பாடல் வழிவகுத்தால் போதும்! 4 வீட்டினிலே வாழ்கின்ற தாய்மாரே! வாழ வினைசெய்யும் பெற்ருேரே! குழந்தைகளே! என்றன் பாட்டினிலே இனிப்பன்றி நான்பிறந்த இந்நாள் பகிர்ந்தளிக்க வேருென்றும் என்னிடத்தில் இல்லை! கூட்டினிலே அடைபட்ட சிறுத்தையோல் இன்றிக் கொல்புலியாய் மாறிடுவீர்! கொடுமைக்கஞ் சாதீர்! கேட்டினிலே வாழ்வதுவோ! மிகுவெட்கம்! வெட்கம்: கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்! இதுவே.என் செய்தி! ஆளுகின்ற நாற்காலி தமிழ்மக்கள் சொத்தாம்! ஆள்வோர்க்கே என்றென்றும் அதுவுரிமை ஆமோ? மூளுகின்ற எதிர்ப்பிற்கோ கூச்சலுக்கோ அஞ்சி - முற்போக்குத் திட்டத்தைத் தள்ளிப்போ டாதீர்! தோளுக்கு மறவலிமை பூட்டுகின்ற அன்னைத் தொன்மொழியாம் தமிழ்காப்பீர்! நான்பிறந்த இந்த நாளினிலே நான்வழங்கும் நற்செய்தி இஃதே! நலம்பெற்று வளம்பெற்றுத் தமிழ்மக்கள் வாழ்க! 6 2-1-7 அன்று வழங்கிய பிறந்த நாள் செய்தி,