பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் வர்யடங்க மாட்டேன் மழையடங்கி விட்டாலும் வயல்காட்டில் வாழும் வரித்தவளை மணிக்குறளாம் வரிப்பாடல் கேட்கும் குழையடங்கி விட்டாலும் குமரிப்பெண் காதின் குருத்தோலே பனைஒலை குளிர்நினைவை யூட்டும்! இழையடங்கி விட்டாலும் மாமணிகள் தம்மை ஏற்ருேர்க்கே புகழ்சேர்க்கும் இஃதுலகின் உண்மை! கழையடங்கி விட்டாலும் உள்ளிருந்தே பாடும் களிவண்டைப் போலென்றும் வாயடங்க மாட்டேன்! கடல்படித்த கார்மேகம் காற்ருேடு கூடிக் களித்திருந்த காலத்தும் வாயடங்க வில்லை! - உடல் படிந்த நீலநிறக் குளம் ஏரி என்றும் ஊமையாய் இருந்ததுவோ? கரைவாழும் தென்னே மடல் படித்த ஒலையெலாம் நமக்கென்ன வென்றே வாய்மூடிக் கிடந்ததுண்டோ? மறுப்பாரும் உண்டோ? கெடல்படிந்த இவ்வுலகை மாற்ருதோன் மூடன்! கீரிநான் பாம்பிற்கு! வாயடங்க மாட்டேன்! நானுண்டு; நான் கற்ற தமிழுண்டு; போதும்! நல்லோர்கள் வல்லோர்கள் நற்றமிழை யாத்தோர் தேனுண்டு நான் வாழ்வேன்; சீர்சிறப்பு வேண்டேன்! தெருவெல்லாம் ஆருகப் புரண்டாலும் நாய்கள் தானுண்டு மகிழாதாம்! நக்கித்தான் பார்க்கும்! சான்ருேர்வாய் பொய்த்திடுமோ? ஏமாற வேண்டாம்! வானுண்டு கதிர்காலும் வெண்மதியம்! நாளும், - மடச்செயல்க் கண்டென்றும் வாயடங்க மாட்டேன்! 3.