பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகனிதாசன் எனக்கெழுதும் நல்என்னம் எனக்கினிமேல் இல்லை! எழுதியதால் நான்கண்ட(து) ஏதேனும் உண்டோ? உனக்கெழுதும் தமிழ்ப்பாடல் தமிழ்மகளே! கேட்போர்; உலகியலை வாழ்கின்ற உயிரினத்தின் பண்பைத் தனக்கெழுதும் பாடலெனக் கொள்வாரோ! அன்றித் தனித்தமிழர் பண்பென்று தடம்புரண்டு போவாரோ! மனக்கெழுதும் அமைதிப்பண் புத்துலகம் சேர்க்கும் வாழ்விற்கு நான் என்றும் வாயடங்க மாட்டேன்! 4 பாடாமல் இருக்கத்தான் நினைக்கின்றேன்; என்றன் பாசேறித் தமிழ்ஏறிப் போய்விட்ட நெஞ்சம்! கூடாமல் இருந்திடுமோ வெள்ளம்கூ டாதோ கொடுமைகளைப் பசியால்வாழ் ஏழைகளை எண்ணி வாடாமல் வாழ்வதுவோ இந்நாட்டின் வாழ்க்கை? மறத்தமிழா இளம்புலியே! நல்வாழ்வு மண்ட ஓடாமல் ஒளியாமல் உன்கருத்துக் கொவ்வா உதிரிகளை உதைத்தெறிவாய்! நாமடைவோம் வாழ்வே! 5