பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் r 7 கணக்குத் தீர்ப்போம் வான்பொய்த்த காலத்தும் பொய்யா ஆறு! வளநன்செய் புன்செய்நெல் மலிந்த நாடு! தேன்கொழிக்கும் நெடுமலைகள் மலையின் சாரல் செறிந்தபலா மாவாழை குவிந்திருந்தும் ஏனின்று மக்கட்குப் பசியைப் போக்க இயலவில்லை? நம்குறையா? அரசின் போக்கா? கூன்நிமிர்ந்த எழுகதிரைக் கண்டோம் வாழி! கொடுமைக்கிங் கின்ருேடே கணக்குத் தீர்ப்போம்! ! பெயல்தேக்கி நீர்பாய்ச்சிக் காட்டை மேட்டைப் பெருந்தோள்கள் வலியெடுக்க ஒவ்வோர் நாளும் வயலாக்கி நெல்விளைப்போன் மனைவி மக்கள் வயிற்றுக்குப் புல்லுணவு கிடைக்க வில்லை! அயல்நோக்கி அழுகின்ருர்! விளைப்போர் ஏங்க அறுவடையைச் செய்கின்ருேர் வேற்றேர் ஆவார்! கயல்விழியே! புத்தாண்டைக் கண்டோம்! வாழி! - இன்ருேடே நம்குறையின் கணக்குத் தீர்ப்போம்! # வற்ருத வளங்கொடுக்கும் கடலோ முப்பால்! வருமழையைத் தடுத்தளிக்கும் மலையோ முப்பால்! கொற்றத்தை நனிநடத்த வழிசொல் முப்பால் கொண்டுள்ளோம்! என்ருலும் குறைகொண்டுள்ளோம்; சுற்றத்தை வாழ்விக்கும் கதிரைக் கண்டோம்! தொடுவான இருளினிமேல் தொலைந்தே போகும்! பெற்றுவளர் தாய் நாட்டின் நலத்தை எண்ணப் பெரியோரை இன்ருேடே கணக்குத் தீர்ப்போம்! $