பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வாணிதாசன் அறநூலும் பொருள்நூலும் அள்ளியள்ளி ஆன்ருேர் அலைகடல்சூழ் உலகிற்கே அளித்துவந்த துண்டே! மறத்தோளர் முடிமன்னர் வாழ்ந்திருந்த நாளில் வாழ்ந்திருந்த வளம் எண்ணில் மனம்கொதிக்குதந்தோ! அறம்பிழைத்து வாழ்ந்ததில்லை! ஆனாலும் இன்ருே அவையாவும் பழங்கதையாய் ஆக்கிவிட்டார் மக்கள்! சிறந்தோங்க வழிசெய்வோம்! செயல்மறவர் தேவை! தீயெங்கும் பரவட்டும் பரவட்டும் தியே! 4 வாழாத காலத்தில் நல்வாழ்வு வாழ்ந்தோம்! வந்தவர்க்கிங் கிடங்கொடுத்தோம் விரிந்தமனப் - lug&w tumrib! ஆழ்கடலில் முத்தெடுத்தோம்; அயல்நாட்டிற் கீந்தோம்! அகில்தேக்குச் சந்தனமும் அளித்துதவி வந்தோம்! ஈழத்தில் கொடிநட்டோம்; ஈழஉற வாளுேம்! இன்றுள்ள நிலையென்ன? இதுதான நேர்மை? கோழையா நாமெல்லாம்? கொல்புலியின் போத்து கொழுந்துவிட்டுப் பரவட்டும் பரவட்டும் தியே! 5 தென்னகமே! தாய்நாடே! தீந்தமிழர் வாழ்ந்த திரைகடல்சூழ் பொன்னடே! என்நாடே! வாழ்க! முன்னேர்கள் தோள்வலியால் அறிவாற்ற லாலே முத்தமிழே செழித்தோங்கி அரசோச்சி வந்தோய்! இந்நாளில் இந்நிலையில் இறக்கிவைத்த கீழோர் இருந்தென்ன? இறந்தென்ன? ஆன்ருேர்கள் வாழ்ந்த பொன்னை தமிழ்ச்சங்க காலத்தைக் காணப் புதுமைத்தி பரவட்டும் பரவட்டும் இன்றே! 6 12-12-’64