பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 13 தமிழர் அஞ்சாதே! அஞ்சாதே தமிழா! நீ அஞ்சாதே தமிழா! தஞ்சமென ஒருநாளும் பிறர்க்கீழ்த் தலே சாய்த்திடு வழக்கம் நஞ்சினும் கொடிதென நெஞ்சத்தில் காத்தான் நம் நாட்டுத் தமிழன் மஞ்சு பொழிந்து உயிர்க் குணவாகி மா நிலம் காத்திடுதே! சஞ்சல மெதற்கு இயற்கையாம் அன்னை தருவாள் உன் பசிக்கே! கொஞ்சிடு மக்கள் மனைவி முகத்தில் குலவிடு புன் முறுவல் வஞ்சகர் நெஞ்சைப் பிளந்திடு வண்மை வாளெனப் பெற்று விட்டாய்! கஞ்சமலர்முகத் தமிழ்த்தாய் வாடக் காணு திருப் பாயோ? அஞ்ச விலஇனித் தனித்தமிழ் நாடு ஆளுகை உன்ன தடா! நெஞ்சினில் வீரம் கையினில் வில் மீன் நீள்புலிக் கொடி யுயர்த்தி அஞ்சலி செய்வாய் தமிழா! தமிழர் ஆவியின் சின்ன மதே!