பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 வாணிதாசன் செயத் தக்க செய் இருள்திரையைக் கிழித்தெறிந்தான் கீழ்த்திசையில் பரிதி ஈடற்ற திராவிடத்தின் தந்தைபெரி யார்போல்! உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் இனியஞ்ச வேண்டாம் ஊமைகளாய் நம்நாட்டார் திராவிடர்கள் பணியால் கருகிவிட்ட மொட்டுகளாய் வாழ்ந்திருந்த காலம் கலைந்தோடு கார்போலத் தொலைந்தோடிற் றின்றே திருமிக்க திராவிடனே! நீநாட்டை ஆள்வாய்! தைபிறக்க வழிபிறக்கும் செயத்தக்க செய் f கரும்பாலை சுற்றுகின்ற முதுகாளே போலக் கடவுளென்ற மேற்பூச்சில் பொய்க்கதைகள் சொல்வி இரும்பாக்கி ஞர்மனத்தை ஆறலைக்கும் கூட்டம் இழிவுசெய்தார் பெண்குலத்தைக் கலைமொழியை வாழ்வை; மருந்திரண்டு நான் கண்டேன்; திராவிடனே! சொல்வேன் வாழ்வதற்கும் உன்நாட்டை நீ ஆள்வதற்கும் கரும்புமொழி யார் உயர்த்து; ஆரியத்தை நீக்கு! தைபிறக்க வழிபிறக்கும்! கையாண்டு பாராய்! * குளக்கோயில் திறந்துவிட்டால் குலம்ஒழியு மென்றே கொண்டுவந்தார் ஆளவந்தார் புதுச்சட்டம்; மக்கள் உளம்மாறக் காளுேமே! இதற்கென்ன செய்வார் ஊறிவிட்ட ஆரியத்தை வேரொடு கல்ல இளந்தமிழா திராவிடனே! நீஎழுவாய் இன்னே! இதுவன்ருே செயவேண்டும்; மற்றவைகள் வீணே! வளமான தைபிறக்க வழிபிறக்கும் தம்பி! . மகிழ்வோடு எதுவரினும் செயத்தக்க செய்வாய் 3