பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாணிதாசன் இதுவ ஆட்சி? கெட்டுநொந்து வாழ்ந்திருந்தார் ஆட்சி ஏற்ருர்; கேடில்லை நாட்டிற்கென் றெண்ண மிட்டோம், விட்டேறும் வெள்ளையனே மேலாம் என்று மெய்ப்பிக்கத் துணிந்திட்டார் ஆளவந்தார்; பட்டினியில் வாடுகின்ற ஏழைக்த்ாகப் பரிந்தன்று பலபேசி எதிர்த்துநின்றர் பட்டினியென் ருலின்ருே ஆளவந்தார் பார்க்கின்ருர் வேறெங்கோ! இதுவா ஆட்சி? - * பிறர்க்கின்ன செய்யாமல் நாங்கள் நாட்டை ஆண்டிடுவோம் என்றன்று பேசி வந்தார் பிறர்க்கின்ளு; நமக்கென்ன? என்று நாட்டைப் பெற்றவுடன் நினைக்கின்ருர்; இதுவா ஆட்சி பொறுப்பேற்ருர் தமிழ்நாட்டில்; தமிழுக் காகப் பொன் முடியை எதிர்பார்த்தோம்; எங்கள் நெஞ்சில் வெறுப்பேற்றிக் காதறுந்த செறுப்பாம் இந்தி மேலென்று கொண்டுவந்தார்; இதுவா ஆட்சி? 2 பேச்சுரிமை எழுத்துரிமைக் காக அந்நாள் பெருங்கிளர்ச்சி செய்துவந்தார் ஆள வந்தார் பேச்செழுத்து நாடகத்திற் கிவர்கள் இன்று பெரும்பூட்டுப் போடுகின்ருர், இதுவா ஆட்சி? வீச்சுக்கும் தடியடிக்கும் ஆளவந்தார் மிகுபொறுமை காட்டிநின்ருர், உரிமைக் காகக் கச்சலென்ருல் தொழில்நிறுத்தக் கூட்டம் என்ருல் குண்டுகள்பா ழாக்குகின்ருர் இதுவா ஆட்சி 3