பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வாணிதாசன் வறு ைம வறுமையைப் பாடென்ருன் வந்தொருவன்! அந்த வந்தவனே வளர்தாடி நரைமீசைக் காரன்! சிறுமையை நான்போக்க வாழ்கின்றேன்; என்றன் செயலினிலே சிறுகடுப்பும் நான்கண்ட தில்லை; மறுமைக்கே வாழ்கின்றேன்: மனை யறத்தில் ஈன்ற மக்களின்மேல் பற்றில்லை; பரிவில்லை என் முன்; பொறுமைக்கே எல்லையுண்டாம் வாய்மூடி நின்றேன்! புல்லுருவி யால்நாடு புதுமைகண்ட துண்டோ? l மண்மண்டி மழைகுளிரின் வளிமண்டிச் சேர்த்த வாழ்க்கைதான் வறியோரின் இன்றுள்ள வாழ்க்கை! புண்மண்டி வாழ்வதல்லால் போக்கிடந்தான் உண்டோ? புத்துலகம் புதுவாழ்வு புதுநோக்கம் என்றே விண்மண்டி வருகின்ற இளந்தென்றல் போல வெல்லத்தைத் தடவுவதே இன்றுள்ள ஆட்சி கண்மண்டிக் காரிருள் வாழ் கல்லாத மக்கள் கதிர்ஒளியில் களிப்பினிலே வாழ்வதுதான் வாழ்க்கை: 2 செல்வந்தர் பெருந்திருட்டே இன்றுள்ள நாட்டின் சிறுமைக்கும் வறுமைக்கும் அடிப்படையாம்! ஆன்ற செல்வந்தர் பலதுறையில் தூயதமிழ் பாடித் துறைதோறும் துறைதோறும் தொகுத்துரைத்தும் என்றும் மல்வந்தார் எழுச்சிபெற்ருல் வறுமை யறக் கூடும்! வழியிதுதான்! மாற்றுவழி தென்படவ்ே இல்லை! பல்வந்தார் குழந்தைகளின் பண்பாக்க வல்ல படிப்புணர்த்தும் கணக்காயர் வறுமைக்கும் மாற்ரும் 3