பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 29 காஇனிக்கப் பாடுகின்ற குயிலினத்தைப் போலக் கசிந்துருகிக் கைப்பொருளைக் கவர்கின்ற சண மாஇனிக்க மாப்பிசைந்து வழங்குகின்ற எத்தன் வாழ்கின்ருன்; வறுமையற்று வளம்செழிக்கப் போமோ? பாஇனிக்சப் பாடுகின் முன் பாவல்லோன்; அந்தப் பைந்தமிழன் வறுமையினை எவன்கண்டு கொண்டான்? நாஇனிக்கப் பொதுமேடை ஒலிபெருக்கி முன்னர் நான் என்பான்; நம்பிக்கை வைத்தெடுத்துப் போவான்! 4 பிறப்பினிலே தாழ்ந்த உயிர் உயர்ந்த உயிர் இல்லை! பின்வந்த சரக்கிதுவாம்; அறிவற்று ஏற்ருேம்! பிறப்பினிலே வறுமைவந்தே உடன்தொடர்ந்த தில்லை! பின்வந்த சரக்கிதுவாம், திருடர்களின் செய்கை! பிறப்பினிலே உயிரினங்கள் யாவையுமே ஒன்ரும்: பேச்சில்லை வறுமைக்கே கொடுவாளைத் துக்கே! இறப்பினிலே யார் வந்தார்? எதைஎதையோ கண்டார்: எடுவாளே தயங்காதே வறுமைக்கு மாற்றே! 5 வெட்டாரிவாள் கையெடுத்தால் வேற்றுமை இங்குண்டோ? வீரத்தைக் காட்டாமல் வீழ்வதுவோ வாழ்வு? கட்டரிவாள் எடுத்துத்தான் நன்செய்நெல் அறுத்தே களத்தினையே கண்டவன் நீ மறந்தாயோ! வறுமை முட்டரிவாள் தேக்கியவன் என்றும் நம் நாட்டின் வறுமையைத் தேக்கியவன் வாழவிடு வாயோ? சுட்டரிவாள் எத்தர்கள்! தூக்கிமண் பூத்த குளத்தினிலே துவைத்திடுவாய் வறுமைக்கு மாற்றே!