பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் டாக்டர் மா. நன்னன், எம். ஏ, பிஎச். டி. தமிழ் வளர்ச்சி இயக்குநர். "குறளகம்’ சென்னை-600001, நாள்: 3-7-81. அணிந்துரை தமிழறிஞர்களுக்குத் தங்கன் பெயரை எடுக்கும் (நீக்கும்) பிள்ளைகள் பிறந்திருப்பதை நாம் தாராளமாகக் காண் கிறோம். ஆனால் பெயரைக் காக்கும் - உயர்த்தும்நிலைக்கச் செய்யும் பிள்ளைகள் பிறந்திருக்கக் காண்பது அரிதாகும். அத்தகைய அரிய காட்சி ஒன்றை வாணி. நலங் கிள்ளியைப் பார்த்தபோது நான் கண்டு மகிழ்கிறேன். புது வைக்கவிஞர் வாணிதாசனின் மகனாய்ப்பிறந்து அறிவாலும் தமிழ்ப் பண்பாலும் வளர்கின்ற வாணி - நலங்கிள்ளி தம் தந்தையார் எழுதி வெளியிடாமல் விட்டுப்போன கவி தைகள் சிலவற்றைத் தொகுத்து வாணிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி என்னும் பெயரில் வெளியிடுவதைக் கண்டு உவந்து அவரின் விரும்பத்திற்கிணங்க அணிந்துரை ஒன்றும் விரும்பி அளிக்கின்றேன். : என்தாசான் எனப்புதுவைச் சிவம்சொல்லல் உண்மை! எனதர் சான் என உலகம் என்றென்றும் சொல்லும் (பக். 65) என்னும் அடிகளில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவர் தாம் என்னும் உரிமை கொண்டாடும் தகுதி