பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகக் 33 அவள் வேண்டும்! அவள் வேண்டும்! அவள் வேண்டும்! அவளே வேண்டும்! பவளஇதழ் தவளநகைப் பசப்புக்காரி! பெருங் குறும்புக்காரி! { முழுநிலவோ முகந்தானே தாமரையோ முகத்தில் பூத்த-செங் கழுநீரோ கயல்தானே கூர்விழியோ? கற்கண்டோ செஞ்சொல்? - 2 மான்தானே! மயில்துானே! மடப்பிடியோ! வானில் பூத்த-ஒளித் தேன்நிலவோ! தென்றலிளம் பூங்காற்ருே ! கிரிப்புக் காரி! - 3 வெட்டி வெட்டிக் கண்சிமிட்டும் நெட்டுக் காரியோ! வெண்ணிலவில் குங்குமம்சேர் பொட்டுக் காரியோ! செட்டுக்காரியோ! தமிழ்மெட்டுக் காரியோ! நெஞ்சைத் தொட்டுத் தொட்டுப் போய்மறையும் துடுக்குக்காரியோ 4 தொட்டெடுக்க எட்டிப் பாயும் குட்டைக் கயலோ! தோகை மயிலோ! பழத்தோப்புக் குயிலோ! கட்டிக் கரும்போ! சுவைக்கன்னற் றமிழோ! காவியமோ! நடை ஒளியமோ! 5 4-10-'71 елдР-3