பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அாணிதாசன் காதல் காதல்! காதல்! காதல்! காதல்!-எங்கும் காதல் பெருவாழ்வே! வாழ்க! மோதும் கடல்சூழ் உலகினில் எங்கும் முதிர்ந்த பெருவாழ்வே!-காதல் முதிர்ந்த பெருவாழ்வே! R பென் : தென்றல் மலர்தழுவும் நேரம்-மேற்கில் செவ்வொளி வான் தழுவும் நேரம் குன்றம் எதிர்ஒலிக்கக் கேட்டேன்-தோப்பில் குயிலினம் ஆணழைக்கக் கேட்டேன்! . 2 ஆன் : வண்டு மலர்தழுவப் பார்த்தேன்-கிளை மான்கள் இணைந்து துள்ளப் பார்த்தேன் கொண்டல் மலைதழுவப் பார்த்தேன்-ஒடை . கொட்டு முழவிசைக்கக் கேட்டேன்! 3. Grueis : ஆறு கடல்தழுவக் கண்டேன்-கடல் அலைகள் கரைதழுவக் கண்டேன் வேறு வேருண உயிர் ஒன்ருய்-நெஞ்சில் - வேரூன்றிப்போவதுதான் காதல்! 4