பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வாய்த்த வாணிதாசன் தம் ஆசான் மறைவிற்கு இரங்கி திலைகலங்கிப் பாடி யுள்ள பாடல்கள் நம் தெஞ்சத்தையும் கலக்குகின்றன. இவரது நிலை பொதுவாகத் தமிழ்ப் புலவர்களுக்கே உரிய சிறப்பு நிலையாகிய கொடிய வறுமை நிலையாகவே அமைந்திருந்ததென்பதை உணர முடிகிறது. பாட்டினிலே இனிப்பன்றி நான் பிறந்த இந்நாள் பகிர்த்தளிக்க வேறொன்றும் என்னிடத்தில் இல்லை! (பக். 2) என்று கூறும் இவரது கூற்றிலிருந்து தாம் பிறந்தநாள் பரிசாகத் தமக்கினியவர்களுக்கு இப்பாடலைத் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாத நிலையில் இருந்திருக் கிறார் என்பதை அறிந்து நான் பெரிதும் வருந்துகிறேன். பொருள்தான் இல்லையென்றாலும் உற்றார், சுற்றம் என்று கூறவும் ஆளில்லை என்று அவர் கூறுவதை அறிகிற போது அவரின் வாழ்க்கையின் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. -புகழ் சூழத்தான் நினைக்கிறேன் சுற்றமெனக் கில்லை - ஆன்ற - சுற்றமெனக் கில்லை (Lié:3) எனும் வாணிதாசனின் பாடற்பகுதி மேற்கூறிய அவர்கம் நிலையை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்நிலையில் இருக்கும் அவர் - கெடல்படித்த இவ்வுலகை மாற்றாதோன் மூடன்! கிரிநான் பாம்பிற்கு வாயடங்க மாட்டேன்! மடச்செயலைக் கண்டென்றும் வாயடங்க மாட்டேன்! - (பக்.5) என்றெல்லாம் கூறி : கவிஞராம் தம் கடமையைச் செய்வதில் தாம் எத்தகையர் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார். - -