பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவிதைகள் 43 நெடுந்துாரம் வட்ட முழுநிலனே! அமிழ்தே! மாமதிப் பெண்ணரசே! எட்டி உனைத்தாவ வொண்ணு தெங்கோ நீ பூத்துவிட்டாய்! கட்டிக் கரும்பவளும் உனைப்போலென் கருத்தில் கலந்துவிட்டாள்! எட்டித் தழுவமென்ருல் அவள் பூத்த இடமோ நெடுந்துாரம்! 1 தேன்மொய்க்கும் வண்டினங்காள்! அழகொளிர் சேயிழையார் விழிகாள்! தான் மொய்க்க எண்ணவொண்ணுத் தேனடை நன்மலை பூத்துவிட்டீர்! கான்மொய்க்கப் பாட்டயரும் குயிலான்னன் கருத்தில் கலந்துவிட்டாள்! ஊன்மொய்க்கத் தழுவமென்ருல் அவன்பூத்த ஊரோ நெடுந்துTரம்! - 2 வான்தவழ் மாமுகிலே! அழகே! மலர்க்கூந்தல் நல்லொளியே! தான் உனை நண்ணவொண்ணு மலைஉச்சி நடுவில் நீ நண்ணிவிட்டாய்! மான்விழிப் பெண்ணவளும் உனைப்போல் என் மனதில் கலந்துவிட்டாள்! ஊனில் தழுவயெ ன் ருல் அவள் பூத்த ஊரோ நெடுத்துாரம்! 3.