பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 43 அங்கே! அங்கே: மாரியெங்கே? மண்ணெங்கே? வருவழியோ நெடுந்துரம்! வழிநில்லா தோடிவரும்: அங்கே! அங்கே!! ஏரியெங்கே? கொக்கெங்கே? இடைவழியோ நெடுந்துாரம்: இறகடித்துப் பறந்துவரும் அங்கே! அங்கே!! f மடல் எங்கே? வண்டெங்கே? வருவழியோ நெடுந்துாரம்: மறவாமல் ஓடிவரும் அங்கே அங்கே!! கடல்எங்கே? ஆறெங்கே? கடக்கும்வழி நெடுந்துாரம்: கரைகடந்தே ஓடிவரும் அங்கே! அங்கே!! * அகிலயெங்கே? கடலெங்கே? அளக்கவொண்ணு நெடுந்துாரம்: ஆளுலும் ஓடிவரும் 莎 அங்கே! அங்கே!! நிலவெக்கே? கடலெங்கே? நெடுந்துாரம்! என்ருலும் நீளொளிக்கை நீட்டிவரும் அங்கே! அங்கே!! 3