பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கொடுமைகளை அழிப்பதற்குப் 'பிற்போக்கு நிலைமாறப்ரவட்டும் தீயே (பக்.9 என்றும்,நன்மைகளை ஆக்குவதற்குப் 'புதுமைத்தீ பரவட்டும் பரவட்டும் இன்றே" (பக். 10) என்றும் கூறித் தம் வேணவாவை அவர் வெளிப்படுத்தி யிருப்பது இன்றைய தமிழருக்கும் உரமூட்டுவதாகும். இத்தொகுதியில் வந்துள்ள பாடல்கள் வாணிதாசனின் பாத்திறத்திற்குப் பொருத்தமான எடுத்துக் காட்டுகளாக இலங்குகின்றன. அத்தகைய பாடல்களுள் இரண்டினை இங்குச் சுட்டி மகிழ்கிறேன். மாதுளை ... ... . ... ... ... குனிந்து (பக். 36) சாய்வாழ் ... ... ... ... ... சொத்தே (பக்.9 5.96) இவர்தம் பாடலிலுள்ள பொருட் சிறப்பிற்குப் பல சான்றுகளை இந்நூலிலிருந்தே எடுத்துக் காட்டலாம். அவற்றுள், ! . . பக்கம் 80-81 இல் வெண்கழுகுப் பேடையைப் புனைந்து காட்டும் பாடலில் அதன் தாய் அன்பை எடுத்துக்காட்டும் பாங்கு மறக்க முடியாததாகும். பக்கம் 51-52 இல் இன்னும் அவள்மேல் நினைப்பா? என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள், மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம் என்னும் புரட்சிக் கவிஞர் வகுத்த இலக்கணத்திற்கு இலக் கியமாக அமைகின்றன. பேராசிரியர் சுந்தரனாரின் மனோன் மணியத்தில் சேரவேந்தன் புருடோத்தமன் தான் கனவில்