பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இாணிதாசன் பாவேந்தரோடு பாவேந்த ரோடென்றும் அருகிருக்கும் பேற்றைப் பல்லாண்டு பெற்றவன் நான்! பலநூலைக் கற்றேன்! பூவேந்து சேந்தேனின் புதுச்சுவையை ஒக்கும் புரட்சிமிகு பாடலெலாம் அவர் பாடக் கேட்டேன்! மாவேந்து பழச்சாறே அவர்யாத்த பாடல்! மறுமலர்ச்சி மனமலர்ச்சி மொழிமலர்ச்சி கூட்டும்! காவேந்து பேரெழிலாம் கவியரசர் உள்ளம் கனிந்துவந்த கவிதையெலாம் என ஊக்கக் கண்டேன்! i இளவயதில் அவரிடத்தில் நான்பயின்று வந்தேன்! இனியமுகம், பாடத்தை எடுத்தியம்பும் ஆற்றல் வளமுடையார்; வகையுடையார்! அவரிடத்தில் கற்ருேt மாத்தமிழன் வளமுடையார்; பற்றுடையார்; அஞ்சா உளமுடையார்; செயலுடையார் உயர்நோக்க முடையார்! ஒண்டமிழின் முன்னேற்ற நோக்குடையார் ஆவர்! களமுடைய எதிர்க்கின்ற போர்மறவன் என்றன் கவியரசர்! பகைகண்டு கலங்கியதே இல்லை! 2 பாப்புனையும் நற்ருெழிலை அவரிடத்தில் கற்றேன்! படித்துணரும் நற்செயலை அவரிடத்தில் கண்டேன்! யாப்பணியைத் தொன்னுரலை அவர் விளக்கக் கேட்டேன்! யாரினிமேல் அவர்போல எனையூக்க வல்லார்? காப்பணியாய் எனக்கிருந்தார்; நற்கவிதை யாக்கும் கலைச்செறிவை நனிவிளக்கி என எழுதச் செய்தார்; பாப்பாவின் இனமெல்லாம் பாடுகின்ற ஆன்ற பரம்பரையை, நற்கவிஞர் பாசறையைக் கண்டார்! 3.