பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 59 காடெடுத்த பல்லவர்கள் நற்ருெண்டை நாட்டின் கடல் புரளும் சீர்ப்புதுவை பெற்றெடுத்த செம்மல் ஏடெடுத்தால் பாப்பிறக்கும்; இனியதமிழ் பிறக்கும்? எவரிடத்தும் பேச்செடுத்தால் இருபொருளும் பிறக்கும்! மாடெடுத்து நகைசெய்வோர் மலைக்கின்ற வண்ணம் வகைவகையாய்த் தமிழ்முத்து மணிமாலை யாக்கிப் பீடெடுத்த தமிழ்த்தாயின் முடிசூட்டிச் சென்ற பெரும் புலவர்; பாவேந்தர்; எனதாசான் வாழ்க! 4. பன்னூறு திருமணத்தில் அவைத் தலைமை ஏற்பார்! படர்ந்துவரு நிழல்போல அவரோடு செல்வேன்! தொன்னூலின் பொருள்விளக்கிச் சுவைவிளக்கி இல்லம் தொடங்குகின்ற மணமக்கள் நல்வாழ்விற் கான பொன் னுாறு தீந்தமிழால் புதுக் கருத்தைச் சொல்வார்! புதுக்கிள்ளே போல் நானும் இரண்டொன்று சொல்வேன்! மன்னுாறு விருந்தினிலும் அருகமர்த்திக் கொண்டு வயிருர உண்ணென்று வாயாரச் சொல்வார்! 5 பலா மொய்க்கும் ஈப்போல அவரிருக்க வந்து பல்லோர்கள் சூழ்ந்திடுவர்; நீண்டகடல் ஒர நிலாச்சோற்றை உண்பதுபோல் அவர் வாயின் பேச்சை நெடுநேரம் கேட்டிருப்பர்; சிரித்துமகிழ்ந் திருப்பர்! புலாலுணவே அவர்விருப்பம்! அவரோடே சேர்ந்து புசித்தின்பம் கண்டதனால் புல்லுணவை மறுத்தேன்! உலாவுவார் கடலோரம் அதிகாலை மாலே! ஒப்பில்லாக் கனகசுப்புக் கவியரசர் வாழ்க! 6 கானெழுந்த மலைக்காட்டு நீரருவி! நன்கு கனிந்திருக்கும் குண்டுபலா மாவாழை! உச்சித் தேனெழுந்த செஞ்சொல்லார்! பூக்காட்டுத் தும்பி! செத்தமிழ்த்தாய் சன்றெடுத்த சீர்த்திமிகு செல்வர்!