பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு காதலித்த காரிகையைப் பற்றிய நினைவைப் போரில் ஈடுபட்டேனும் மறக்கலாம் என்று எண்ணுவதாகக் கூறப்படி டுள்ளது. அது அவ்வேந்தன் வீரத்திற்கு எடுத்துக் காட் டாகத் திகழ்கிறது. அதேபோல் வாணிதாசனின் இப் பாடல்கள் காதல் உணர்வுகளைத் தமிழ்ப் பாடலின் மூலம் மறக்கலாம் என்று கூறுகின்றன. இது வாணிதாசன் தமிழின் மேல் கொண்டுள்ள ஆழ அகலத்தையும் உயரப் பருமனையும் குன்றின்மேல் இட்ட விளக்காகக் காட்டு கின்றன. பக்கம் 29 இல் “எடுவாளைத் தயங்காதே வறுமைக்கு மாற்றே" என்று கூறும் பாடல்கள் இவர் புரட்சிக் கவிஞரின் மாணவர் என்பதை தன்கு வெளிப்படுத்துகின்றன. பக்கம் 65இல் சற்றொதுங்கிப் போவீர்” என்னும் தலைப்பிலுள்ள பாடல்கள் நம் கருத்தையும் கண்களையும் கலங்கச் செய் கின்றன. தமிழர் தளபதிகளுள் ஒருவராகிய பன்னீர் செல்வம் ஒமான் கடலுக்கு இரையான காலத்தில் புரட்சிக் கவிஞர் பாடிய பாடல்களை அவை நினைவூட்டுகின்றன. இனி இவரின் உவமை அழகுக்குச் சில இடங்களைத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன். பக்கம் 26இல் இவர், காதற்ற ஊசியைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன நம் செவிகளுக்குக் காதறுந்த செறுப்பை உவமையாக்கிச் சுவை பூட்டக் காணலாம். பக்கம் 39இல் எழுத்துப் புணர்ச்சியினைப் போலே - நாம் இரண்டற ஒன்றிவிட்டதாலே என்பதும், பக்கம் 95இல் . பட்டாடை உரல் சுற்றிப் பார்த்திருந்தால் என்னாம்? என்பதும் இவர்தம் அரிய உவமைத்திறம் நம் உவகைத்திற ழாகும். - -