பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 6i பார் இழந்த தந்தோ! அலைமோதும் பெருங்கடலே! கடற்கரையின் ஒரம் அசைந்தாடும் தாழைகளே! பசும்புன்னைக் காடே! வல்ைகாயும் மணற்பரப்பே! வாடுலர்த்தும் பெண்கள் மலர்பூத்த நீள்கழியே! அந்தந்தோ அந்தோ! கலைவளர்த்த எனதாசான்! தமிழ்வளர்த்த ஆசான்! கண்மூடிப் போனரே! கவி உலகம் என்ஆம்? நிலைகுலைந்த தென்னகத்துத் தாயகத்து மக்கள் நெஞ்சிற்கு வேல்! வேல்! வேல் தீக்கொழுந்து! வேலே!1 குளம்பூத்த தாமரைகாள்! குளக்கரையின் ஒரம் r குனிந்திருக்கும் குருகினங்காள் கரும்போடு செந்நெல் வளம்பூத்த நல்நஞ்சை கடைபாயும் சேல்காள்! மணிப்புறவே பசுங்கிள்ளாய் மாங்குயில்காள்! * ? ei செந்தேன் இளம்பூத்த தமிழ்மொழியைத் தாயகத்தைத் தட்டி எழுப்பிவந்தார் என காசான்! உலகத்து மக்கள் உளம்பூத்த பாவேந்தர்! பகைவீழ்த்தும் போர்வாள்! உயிர்துறந்தார். அந்தந்தோ அந்தந்தோ அத்தோ! 2 கார்தவழும் மலேக்காடே! மலைக்காட்டுச் சாரல் கசித்துவரும் மெல்லருவி கண்கவரும் முல்லாய்! ஏர்தவழும் பசுங்காடே! பசுங்காட்டுப் பூவில் இருந்திசைக்கும் வண்டினங்காள்! எழுந்தோடும். மான்கள்!