பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 63 யார் பொறுக்கக் கூடும்? வான்பூத்துக் கீழ்த்திசையில் பொற்றுகளைச் சிந்தி வந்தகதிர் அந்தியிலே மறைந்திடுதல் உண்மை! தேன்பூத்து மணம்பரப்பி வண்டுகளின் பாடல் செவிமடுத்த பூக்களெலாம் இற்றுவிழல் உண்மை! ஊன் பூத்த தமிழுணர்வும் உளம்பூத்த அன்பும் ஒண்டமிழில் நனிபூத்த இலக்கணமேம் பாடும் கான்பூத்த அருவியொக்கும் திருக்குமர சுவாமி கண்களழ எமைப்பிரிந்தாய்! யார்பொறுக்கக் கூடும்? ! வெண்ணிலவு நாடோறும் வளர்ந்தொளியைப் பாய்ச்சி விசீவானில் அரசோச்சி மறைந்தொழிதல் உண்மை! மண்ணிலவு நிளாறு மலேபிறந்து வந்தே மக்களின் உயிரோம்பிக் கடல்மறைதல் உண்மை! தண்ணிலவு மனத்தோயே! திருக்குமர சுவாமி தமிழ்மொழியே! தமிழ்மொழியின் இலக்கணமே!. உன்றன் பண்ணிலவு சொற்களின்றும் காதொலிக்கு தந்தோ! பகற்கொள்ளை உன்பிரிவு! யார்பொறுக்கக் கூடும்? 2 கார்தேக்கி வைத்திருக்கும் கண்மாயின் வாய்க்கால் கரைபுரண்ட நீரெல்லாம் வறண்டவயல் பாய்ச்சி ஏர்தேக்கி நிலம் உழுது நெல்விளைக்கும் நன்செய் - என்றென்றும் எழிலோடே இருந்ததில்லை; உண்மை! சீர்தேக்கி வைத்திருக்கும் தமிழ்த்தாயின் மூத்த திருக்குமர சுவாமியே இலக்கணத்துச் செம்மால்! தேர்தேக்கி விட்டாயே தேரோட்ட நாளில்! செயலற்றுக் கலங்குகின்ருேம்! யார்பொறுக்கக் கூடும்? 3