பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் கொடிய கூற்றே! கொடிய கூற்றே! கொடிய கூற்றே! அடிமுதல் அறியாக் கொடிய கூற்றே! வயது முதிர்ந்தும் புதிய வலிவொடு மாணவர் அறிவுற மாணவர் பயிற்றும் கணக்காயர் தம்முள் பிணக்கை அகற்றித் தமிழா சிரியர் தாய்மார் கழகம் அயரா துழைத்தே அமைத்த மேலோன்! சென்னை மாநகர் தன்னில் சிறப்புறு மாணவர் மன்றம் வளர்த்த செம்மல்! சித்திரைத் திங்கள் செழுநிழல் போல இத்தரை உலகிற் கிருந்த முதியோன் ! ஆடல் பாடல் அழகிய ஓவிய போட்டி அமைத்தே புன்றலைச் சிரு.ரின் கலேயை அறிவைக் கல்விமேம் பாட்டை நிலைக்கச் செய்யும் நெறிமுறை வகுத்தோன் ! தாத்தா! மயில் சிவமுத்துத் தாத்தா! நீத்தார் உலகை நீத்தார் அந்தோ! அந்நாள் இந்திக்கு இட்ட தீயை இந்நாள் கொடுங்கூற் றிட்டது போலும்! வித்தைச் சமைத்து விருந்துாட் டியதுபோல் அறனில் கூற்றம் அறிவற் றதுவே! தமிழ்க்கினி யாரே தடியொடு நிற்பவர்? புலவர்க் கினியார்? தீந்தமிழ்ப் புவியிழந் ததுமன் போர்மற வனையே! 10 15 20 24