பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வாணிதாசன் யாருக்காக வாழவேண்டும்? யாருக்காக நான் வாழவேண்டும்?-இவ்வுலகில் எவருக்காக நான் வாழவேண்டும்: } ஊருக்காக வாழ்ந்திருந்தேன்; கண்டபயன்?-இன்று நான் உப்புப் பானை ஆகிவிட்டேன்! இல்லை உலுத்த மூங்கில் ஆகிவிட்டேன்! 2. காரைப் போல நான் கொடுத்தேன்-நன்செய் கழனி போல நான் கொடுத்தேன்-இந்தப் பாருக் காக நான் உழைத்தேன்-இந்தப் பாட்டுக் காக எவன் கொடுத்தான்! تصمحاسم مسیه . 3 பெண்டு பிள்ளை என்றே எண்ணிப் பெரிய பாடு நானே பட்டேன்! மண்டை தேய்ந்த கிந்த என்றன் வயிற்றுக்குச் சோறுயார் கொடுத்தார்? 4 கொடுப்பார் யாரோ என்று நான் குந்திக் குந்தி அழுதேன்-எம் ஜியார் கொடுப்பார் என்று சொன்னர்............... பாட்டு முடியவில்லை.குறையாக விட்டு விட்டார்.