பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகன் $9 மறைந்தாரே அண்ணு! வான் தோன்றி வளிதோன்றி என்றென்றும் மங்கா வட்டமிடும் எரிமலையாம் உடுக்கூட்டம் தோன்றிக் கான் தோன்றி மலைதோன்றிக் கார்முகில்கள் தோன்றிக் கல்தோன்றி மண் தோன்றிக் கடலலைகள் தோன்றித் ேேதான்றித் தேன்கசச்சுச் செந்தமிழ்த்தாய் தோன்றித் தென்னகத்தின் வாரிசுகள் பல புலவர் தோன்றி நான் தோன்றிக் கண்டறிந்த நல்லறிஞர் அண்ணு நற்றமிழ்த்தாய் மூத்தமகன் மறைந்தாரே அந்தோ 1 தத்துகின்ற மடையெல்லாம் முத்தினங்கள் தோயத் தாமரையும் செந்நெல்லும் வாழைபலா மாவும் கத்துகின்ற புள்ளினத்தைக் கைதட்டிக் கூவக் கற்ருேரும் மற்ருேரும் களித்திருந்த நாள்போய் தொத்துகின்ற பசிநோய்க்கே மருத்துவஞய் வந்து தூயதமிழ் நாடெங்கும் படிஅரிசி தந்தார்! கொத்துகின்ற பாம்பின்வாய் உயிர்பிழைக்கக் கூடும்! கூற்றின் வாய் யார் பிழைப்பார்? மறைந்தாரே அண்ணு! 2 குன்று தவழ் கார்முகில்போல் குளிர்மைதவழ் முன்றில் குடியிருந்த ஏழையெல்லாம் கொடுநெருப்புத் தீயின் வென்றிதவழ் போழ்தினிலே மனம் வெந்தார் அண்ணு! வேகாத வீடமைத்தார்; மேதை! மா மேதை! சென்றுதவழ் கடலலைகள் சீர்த்தமிகு சென்னைக் கடற்கரையின் திசையடைந்தார்! உவகத்தார் உள்ளம் இன்று தவழ்ந்(து) எரிகிறதே! தீநீதி எங்கும்! எம் மண்ணு! உலகண்ணு! மறைந்தாரே அந்தோ! 3