பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அாணிதாசன் வான் பார்த்து வயல் உழுத மழைபார்த்து வித்தி வரகுதினை கம்பெள்ளும் புன்செயிலே காணுத் தேன் பார்த்து நிற்கின்ற முடவனைப்போல் பார்க்கும் செந்தமிழ்த்தாய் ஏழைமகன்; நல்லுழவன் வாழக் கூன் பார்த்து நிலத்துவரிக் குறைபார்த்துப் போக்கிக் குடிசையெலாம் களிபொங்கும் குளிர்மையினை எங்கும் தான்பார்த்து மகிழுமுன்னர் முதலமைச்சர் அண்ணு தலைசாய்த்துப் போளுரே! கண் அழுத தந்தோ! 4 முன்னகமும் புறங்கண்டும் முதுபுலவர் வாழ்ந்தும் முடிமன்னர் வழிவந்தும் முக்கடலும் சூழ்ந்தும் என்னகமும் என்ன எண் ணு அகமுலகம் போற்றும் இசைபரப்பி என்றென்றும் வாழ்ந்திருக்கும் கன்னித் தென்னகமே! திருநாடே! உன்றன் நல் வாழ்வின் திசைதிருப்பம் 'தமிழ்நாடு’ பெயர்சூட்டி வைத்தார்! உன்னகத்தில் குடிகொண்டார்! உன் மகனை மூத்த ஒருமகனே உலகிழந்து வாடுதந்தோ அந்தோ! s புன்னையிலே பொன்பூக்கள்! அப்பூக்கள் மொய்க்கும் பொரிவண்டைத் தாலாட்டும் கடலலைகள் பாயும் சென்னையிலே; அந்தந்தோ! நான்கண்ட காட்சி! தீந்தமிழ்த்தாய் அழுகின்ருள்! மக்களழு கின்ருர்! தென்னையிலே வாழையிலே சிறகடித்துப் பாயும் செம்மூக்குக் கிளிப்பிள்ளை புல்பூண்டு மாவும் எந்நிலையோ என்கண்கள் அழுததேகண் துஞ்சா! எங்கெங்கும் எம்மண்ணு எனும் அழுகை அந்தோ! 6

18–2–63