பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இறுதியாக இத்தொகுப்பில் வந்துள்ள பாடல்கள் பற்றி வேறு வகையான கருத்துகளையும் நான் வெளியிட் வேண்டி நேர்கிறது. இதிலுள்ள கவிதைகள் வாணிதாசன் அவர்களால் அவ்வப்போது இயற்றப்பட்டும் அவராலே வெளியிடப்படாமல் இருந்தனவாகும். ஆகவே அவை அனைத்தும் அவரால் செப்பம் செய்யப்பட்ட பாடல்கள் என்றோ அவரால் வெளியிட வேண்டுமென்றுவிரும்பப் பட்ட பாடல் இது என்றோ கொள்ள முடியாது. இருப்பினும் தரம் மிக்கனவாக உள்ள அப்பாடல் தொகுதி யில் ஒரு சில பகுதிகள் அவர்தம் கண்ணும், கையும், கருத் துடன் சரியாகத் தொடர்பு கொள்ளாத காரணத்தால் போலும் தமக்கு ஐயத்தையும் மருட்கையையும் விளைக் கின்றன. பக்கம் 82இல் இடம் பெற்றுள்ள கார்த்திகைத் திங்கள் கடுங்கோடை ஆனாலும் என்னும் அடிக்குக் கார்த் திகைத் திங்களானாலும், கடும் கோடையானாலும் என்று பொருள் கொண்டால்தான் தெளிவாக இருக்கும். பக்கம் 14இல் தீபாவளியைப் பற்றியும், சத்தியபாமை பற்றியும் கூறப்படுவன நல்ல பகுத்தறிவாளரான பாவலர் வாணி தாசன் இவ்வாறு கூறியிருப்பாரா என்று எம்மை மருள வைக்கின்றன. அவ்வாறே பக்கம் 22இல் தும்பிக்கையானை நாம் தொழுதெழுந்தால் என்னும் அடிகளை அவர் கை எழுதியிருக்குமா என்று என்னை ஐயுறச் செய்கிறது. வாணிநலங்கிள்ளி இக்கவிதைத் தொகுப்பை வெளியிடு வதன் மூலம் அப்பாவுக்குத் தப்பாக பிள்ளையாகத் தமிழ் உலகிற்கு அறிமுகம் ஆவதைக் காண மகிழ்ந்து அந்த நல்ல இளைஞரைப் பாராட்டி வாழ்த்துகிறேன். அன்புடன் மா. நன்னன்