பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அாணிதாசன் நல்லோரும் இறப்பதுவோ? காரடைப்பே உற்றதனுல் கண்கவரும் பொய்கைகளும் களத்து மேடும் நீரடைப்பே கண்டதுவாம்; வான்விரிந்த - வெய்யோனே நிலம் எ ரிக்க ஊரடைப்பே உடலடைப்பே உளமஐடப்பே கொண்டிங்கு உழலும் நேரம் Larrorsos Lot-f குடியரசுத் தலைவர் உசேன் வாழ்வடைக்க வந்த தந்தோ! 1 கண்ணுன இளமூங்கில் துளைத்தெடுத்த குழலிருந்து காற்றெழுப்பும் பண்ணுவார்; கார்தவழும் மலைச்சாரல் பழமாவார்; பசுந்தேன் ஆவார்! மண்ணுவார் பொறுமையிலே; நல்லறிவில் மலையாவார்; வாழ்வ ளிக்கும் கண்ணுன தாய்நாட்டின் பாரதத்தின் குடியரசுத் தலைவர் காணிர்! 2 வேய்போன்ற நற்பணிவு, பேச்சினிமை, வெகுளாமை, விரிந்த உள்ளம், சேய்போன்ற இன்சிரிப்பு, செயல்திறமை, நல்லறிவு சேர்ந்த செம்மல்! தாய்போன்ற அன்புள்ளம் பாரதத்தின் குடியரசுத் தந்தை ஜாகிர் மாய்ந்தாரே! மழையில்லாப் பயிரைப்போல் மக்களெல்லாம் வாடு தந்தோ - 3