பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 73 தாய்பெற்ற சீலையைப்போல் மக்களெல்லாம் பாரதத்தில் நலியக் கண்டு தாய்பெற்ற பிள்ளையெலாம் கல்வியென்னும் நல்லறிவு தழைத்தால் அன்றி வேய்பெற்ற முத்தாகார் எனவெண்ணிப் பல்கலையின் விளக்காய் நின்று காய்பெற்ற பாரதத்தைக் கணிபெற்ற பாரதமாய்க் கண்டார் ஜாகிர்! - 4 என்மதமே பொன்மதமாம்! வாழும்மற் றெம்மதமும் இழிந்த தேன்றே தன்மதமே நிலைநாட்டிப் பாரதத்தை இரண்டாகத் தகர்த்த போது புன்மதமே பிரிவினையின் புற்றுநோயாம் எனச்சொல்லிப் புழுங்கி நொந்து நன்மதமே எம்மதமும் மக்களொன்றே என ஜாகிர் நவின்ருர் அன்றே! S முகமதியர் தாய்தந்தை ஆசிரியர் வழிநின்று முனைந்து கற்று முகமதியர் வழிநின்று பிறைவணங்கி சாந்தியெனும் மூத்த அண்ணல் மிகுமதியார் உரைகேட்டுத் தாயகத்தின் பிறப்படிமை விலங்கொ டித்த வெகுமதியார் மதங்களெலாம் ஒன்றென்னும் - புதுமதியார் வீரர் ஏறே! - 6 தனம்கருதிச் செயல்முடிக்கும் தேனீக்கள் செல்வந்தர் தம்போல் இன்றி வனம்கருதிக் குகையிருந்து மூச்சடக்கும் துறவியர்கள் வாழ்க்கை இன்றி