பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வாணிதாசன் இனம்கருதித் தாயகத்தின் இல்லறத்தின் மேலான எழுச்சி எண்ணி மனம்கருதிச் செயல்முடிக்கும் குடியரசுத் தலைவர் நம் மகான்உ சேனே! கல்வியெனும் கடல்கடக்கக் கடல்கடந்து பிறநாட்டில் கல்வி கற்று வல்விலெனும் மேனுட்டார் அரசொடுக்கி அடிமையெனும் வாழ்வைப் போக்கிச் செல்வியெனும் பாரதத்தாய் திருமுடியைச் செப்பனிட்ட செம்மல் காந்தி நல்வழியில் குடியரசை நடத்தியவர் ஜாகிர் உசேன் நல்லோர் ஆவார். 8 இலகு தமிழ் முதலமைச்சர் நல்லறிஞர் அமரரண் ணு இனிய நண்பர்! கலகலத்த பேச்சுடையார்! கற்றறிந்த மாமேதை! கலையின் ஊற்று! நிலையுணர்ந்து மொழியுணர்ந்து நாடுனர்ந்து சான்ருேர்கள் நெறியைச் சேர்த்தார்: உலகத்தமிழ் மாநாட்டில் சென்னையிலே தலைவருசேன் உரைகேட் டோமே! 9 பன்றிகள் போல் பிறந்தாலும் வாழ்ந்தாலும் நாட்டிற்குப் பயனே இல்லை! ஒன்றுபிறந்தால்போதும் மகமதியர் எண்ணிக்கை உயர்வைப் பார்த்தா அன்று.நாம் பாரதத்தின் குடியரசுத் தலைமைதத்தோம்? அதுவே அன்னேர் பொன்று புகழ்க் கேபொருந்தும்; புதுப்பரிதி! வாயாரப் போற்று வோமே! х 10