பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கொடியன் ஒருவன் அவ்வூர்க் குடிமகன் கொலைபல செய்வோன் கொள்ளை அடிப்போன் மலையில் மறைவோன் மாநகர் மக்கள் வீட்டில் புகுவோன் விளைச்சலைக் கவர்வோன் சிறைக்குச் செல்வோன் சிறிதும் கலங்கான் மூடன் முரடன் மூதறி வில்லான் அவ்வூர் மக்கள் அவனைக் கண்டால் அஞ்சுவார் அடங்குவார் அறுவடை எலிபோல்! புலியினும் கொடியன் புனைபெயர் மலைப்புலி, ஒருநாள் அந்த ஊரின் கோடியில் மரங்கள் அடர்ந்த மரக்கிளை தாழ்ந்த குளத்தில் தாமரை குறுநகை புரியும்! கன்றை ஈன்ற கரும்ை நாகு . குளத்தில் மூழ்கிக் கொம்பை உயர்த்தும்! மாநகர்ச் சிறுவர் மரக்கிளை ஏறித் திடுமெனப் பாய்ந்து சிறுகுளம் அதிரக் குளித்து மணலைக் கொண்டு மகிழ்ந்தனர்! மலைப்புலி வந்து மரகிழல் அமர்ந்தான்! சிறுவரின் ஆடலில் திளைத்து மகிழ்ந்தான்! அடிமலைச் சாமி அவ்வழி வந்தார் . மலைப்புலி கண்டார் மனநிலை கண்டார் இதுவே கல்ல வேளை என் றெண்ணி இன்முகம் காட்டி இளங்கை பூத்து மலைப்புலி அருகே வந்து சிரித்தே 'அன்ப! மலைப்புலி அருந்தமிழ் மகனே! பன்முறை உனக்குப் பலப்பல சொல்லி அல்லவை விட்டே கல்லவை செய்ய அறிவுரை பலநாள் ஆற்றினேன்; மறந்தாய்; மீண்டும் உனது மேன்மையை வேண்டி ஆண்டவ னிடம்நீ அடைக்கலம் புகுவாய்! பொய்கொலை திருட்டுப் புன்செயல் மறப்பாய்! 6鲁 65 ፑ0 8t) 85