பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கலையின் செறிவாம் பசுங்காடு காண மாலை வழக்கம்போல் மலையின் அடுத்த நீள்சரிவில் வந்தான் வீர பாண்டியனும்: தலையை நிமிர்த்தி அக்திதரும் அழகைக் கண்ணால் சரிபார்த்து - விலையில் இயற்கைப் பெருஞ்சுவையை விழியால் உண்டு கிடந்தனனே! குயிலின் இசையும் குளிர்காற்றும் கொள்ளை கொள்ளும் பூங்குளமும் அயலி லிருந்து துணிபிடித்தே அழைக்கும் காட்டு முட்செடியும் பெயலை அணைக்கும் வழிமலையும் பின்னித் தாழ்ந்த நீள்கொடியும் மயலை ஊட்டப் பாண்டியனும் வாய்விட் டடடா! என்றனனே! எங்கோ காட்டுப் புதரொன்றில் இருந்து தமிழன் இசையூற்றைப் பங்கு கொள்ளக் குயிலொன்று பாடிக் கூவி அழைத்ததுவாம்! மங்கும் ஒளியும் மணக்காற்றும் மன்னர் மகனைப் பாண்டியனைத் தங்க விட்டு விடவில்லை! தமிழுக் கடங்கார் எவருண்டாம்! வேறு சாரல் அருகில் தழைத்த மரமல்லி வேரில் உதிர்ந்த மலர்மேலே-சீர்பெற்ற தோகை மயில்கள் ஆகவும்-துறையெல்லாம் வாகை குரலை எழுப்புமே- ஆகம் . படிந்த சிறுமயிலைப் பக்கம் விலக்கி மடிந்தவால் தூக்கும் மயில்!