பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வீசும் கதிர் வானில் ஒளியைப் பகல்விசும் செங்கதிரும்! கூனல் பிறையோ குளிர்கிலவில்-தேனில் இனிக்கும் சுவையை இரவுபகல் அள்ளித் தனித்தமிழில் வீசும் கதிர்! t தென்மொழியைத் தீந்தமிழைத் தென்னாட்டு கல்வாழ்வை முன்னேறச் செய்யும் முழுமூச்சாய்-இந்நாளில் வையத் திருள்போக்கி வந்த பகைநொறுக்கச் செய்யும் கதிரே சிறந்து 2 அண்டை அயலில் பிறமொழியில் ஆய்ந்தெடுத்துக் கொண்ட புதுமையெலாம் கூறாக்கி-வண்டல் இடும்பொன்னி வைகைபோல் என்றென்றும் வாரிக் கொடுக்கும் கதிர்வாழ்க வே! - 3. ع؟حه ്རྒྱུ་བོ་ நல்வாழ்வைத் தூண்டும் கவிகள்! எண்ணச் சிறகுகள் என்கின்ற நூல்கண்டேன் பண்ணின் சுவைசேர் பழம்பாடல்-மண்ணில் சுவைசேர்க்கும் கல்வாழ்வைத் தூண்டும் கவிகள் - புவிபோல வாழ்க பொலிந்து! 1 தித்திக்கும் பாடல் செழுந் தமிழின் கல்லூற்று பத்தெட்டுப் பாட்டின் படர் சாயல்-முத்துவிளை தென்னாடு போலச் சிறந்தோங்கி நூற்கவிஞர் எந்நாளும் வாழ்க இனிது! 2 நல்ல தமிழ்வளர்தல் நாட்டிடையில் இக்கவிகள் சொல்லும் திறத்தால் துணிந்திடலாம்-பல்வளத்தில் வாழ்க பழந்தமிழைப் போற்றி வளவாழ்வில் சூழ்க தொகைப் பாடல் போல்! 3. 米