பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கவை பொன் மாலை! வான்பரப்பும் பொன்னொளியை உண்டு-மாலை வாய்குலுங்க நகைக்குமலர் கண்டு-கூன் மாமரத்து நீள்கிளையில் - - வந்தடைந்த பெண்குயில்கள் கூவும்! ஆண்கள் தாவும்! தேனையுண்ட வண்டினங்கள் சோலை-தனில் செம்பரிதி சாயுமந்தி மாலை-முச் செந்தமிழ்ப்பா அமிழ்துதந்த தீஞ்சுவையைப் பாவலர்போல் மீட்டும்! இன்பம் கூட்டும்! - - முன்னிருக்கும் தென்னைமரக் காட்டில்-சிறு முட்புதரின் முனை அமைந்த கூட்டில்-பொன் முட்டைகளைச் சிட்டிணைகள் விட்டுவிட்டுக் காத்திருக்கும் காலை! பொன் மாலை! கன்னிமனப் பெண்கடக்கும் கூறு-போலக் கரைஉராய்ந்து நகர்ந்துசெல்லும் ஆறு-முன் கால்மடித்து நீரையுண்ணும் கலைவிடுத்துப் பிணைஒதுங்கி ஊடும்! துணை தேடும்!