பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாசு போக்கிய வீணையில் வடித்திடு பாட்டோ? பேச வாய்த்தவுன் வாய்மொழிப் பெற்றியைக் கண்டே கிள்ளை போலுனைக் கிளிமொழிக் குமரிகள் கூண்டில் தள்ளிப் பாலொடு மிகுபழம் தந்துமே வளர்த்துக் கள்ளை மீறிடு பேச்சினைக் கற்றிட விழையார்! கொள்ளை யின்பமாம் உன்மொழிக் கூற்றுணர்ந் தோர்க்கே காடு சுற்றியே காவினில் கிளைகளில் கண்ட கூடு சுற்றியே காக்கையின் கூண்டினில் முட்டை தேடி யிட்டனை; ஆயினும் செழுமரச் சோலை கூடு கட்டிடக் குறியிலாக் . குறைபெருங் குறையே! தெள்ளு தீங்தமிழ்ச் செழுங்கவி வாணனைப் போன்றே உள்ளம் பொங்கிட உணர்வுமே லெழுந்திட நெஞ்சம் அள்ளுறு பாட்டினை இசைக்கிறாய் அடிக்கடி, ஆனால் வள்ளல் யாருளார் இசைப்பொருள் உணர்ந்துமே வழங்க! 9.7-'71 i () "குறிய மாவொடு கவிளம் இருவிளம் மாவொன்று அறிதி' என்னும் விருத்தப்பாவின் படி அமைந்த கவித்துறைச் செய்யுள் இது.