பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xv திருமுடி நடராச செட்டியாருக்குப் பின்ளைகள் மூவர். மூவரும் சிறுவர்கள்; குறும்பு நிறைந்த விளையாட்டுப் பிள்ளைகள். தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தனர். நினைத்துப் பார்க்கின் என் இளவயதுக் குறும்பை விட அவர்கள் குறும்பு மிக மிகக் குறைவானதே. இன்றும் என் பிரெஞ்சு அகராதியில் அவர்கள் ஏடுகளைக் கிழித்திருப்பதைக் காணலாம். அதனைப் பொன்னே போல் போற்றி வருகிறேன். அவர்கள் மூவரையும் தூக்கித் துரக்கி விளையாடிய நினைவு என்னுள் பசுமையாக நிலைத் திருக்கின்றது. தந்தையைப் போலவே திருமுடி சேதுராமன் அவர்களும் தமிழ்ப் பற்றோடும் பண்பாட்டோடும் பிறர்க் குதவி வாழும் பெற்றியை நினைத்துப் பார்க்கின் என் உள்ளம் பேருவகையடைகிறது. . நான் கல்வே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என்னோடு என் பிறந்த ஊராகிய வில்லியனூரில் இருந்து செட்டியார் பிள்ளையாண்டான் ஒருவரும் படித்துக் கொண் டிருந்தார். பெயர் நினைவில் வரவில்லை. எங்களுக் கென்றே இரண்டு மேசைகள் நாற்காலிகள் ஒதுக்கப்பட்டி ருந்தன. மாடியில் சிறு சிறு தொட்டிகளில் இரோசாச் செடிகள் பூத்துக் குலுங்கும் அப்பூக்களை இட்டு வீட்டில் கடவுளை வணங்கிய பின்னரே செட்டியார் காலை உண வருந்துவார். மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்; அதில்தான் இரவு உணவுக்குப் பின் திருமுடி நடராச செட்டியார் படுக்க வருவார். எங்கள் அறையை நோட்டமிடுவார். என்னோடு என் ஊர்க்காரர் ஒருவரும் தங்கியிருந்தார். ஆனால் அவர் வயின்ற கல்விக் கடத்தில் முழுக்க முழுக்கப் பிரெஞ்சு வகுப்புகளே நடக்கும். அது Collge Colonial ஆகும். இரவில் நாங்கள் படிக்கவில்லை யென்றால் கடுமையான அன்புக் கட்டளைகள் பிறப்பிப்பார். அறிவுரைகள் தரு வார். எனக்கு அவர் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது தொடர்ந்து கல்வே கல்லூரியில் பயின்றேன். -